ADDED : மார் 20, 2025 05:07 AM
பல்லடம் : பல்லடம், காளிவேலம்பட்டியை சேர்ந்த சுரேஷ் மகள் கணீஸ்வரி, 20. கோவை தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
நேற்று முன்தினம், இரவு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, உடல்நலக் கோளாறு காரணமாக, தான் தற்கொலை செய்து கொள்வதாக, போனில் வீடியோ எடுத்து, தனது தோழிகளுக்கு அனுப்பியுள்ளார். வீடியோவை பார்த்து அவரின் வீட்டுக்கு வந்த தோழி கூறிய பின்னர்தான் கணீஸ்வரி தற்கொலை செய்தது பெற்றோருக்கு தெரிந்துள்ளது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.