/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மனமகிழ் மன்றம் செயல்பட தடை கலெக்டர் உறுதி; மக்கள் நிம்மதிமனமகிழ் மன்றம் செயல்பட தடை கலெக்டர் உறுதி; மக்கள் நிம்மதி
மனமகிழ் மன்றம் செயல்பட தடை கலெக்டர் உறுதி; மக்கள் நிம்மதி
மனமகிழ் மன்றம் செயல்பட தடை கலெக்டர் உறுதி; மக்கள் நிம்மதி
மனமகிழ் மன்றம் செயல்பட தடை கலெக்டர் உறுதி; மக்கள் நிம்மதி
ADDED : ஜன 04, 2024 12:56 AM
அவிநாசி : அவிநாசி அருகே மனமகிழ் மன்றம் செயல்பட தடை விதிக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்ததாக, ஊராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
சேவூர் ஊராட்சி, பந்தம்பாளையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேட்டுவ பாளையம், முறியாண்டம்பாளையம், சேவூர் பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டம் செய்து வந்தனர். இதனால் சில நாட்கள் மன்றம் மூடப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் மனமகிழ் மன்றம் செயல்படுவதை அறிந்து நேற்று முன்தினம் மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஊராட்சி தலைவர்கள் வேலுசாமி (சேவூர்), ரவிக்குமார் (முறியாண்டம்பாளையம்), கணேசன் (வேட்டுவபாளையம்), கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், குரும்பபாளையம் வெங்கடாசலம் ஆகியோர் கலெக்டரை சந்தித்து, மனமகிழ் மன்றத்தை மூட உத்தரவிட முறையிட்டனர்.
இது குறித்து ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:
'மன மகிழ் மன்றம் செயல்படுவதால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே மனமகிழ் மன்றத்தை மூடவும், இடம் மாற்றம் செய்யவும் சென்னையில் உள்ள கலால் வரித்துறைக்கு பரிந்துரைத்து திருப்பூர் எஸ்.பி., மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறுகிறோம்,' என கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.
மூன்று ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து மனமகிழ் மன்றம் செயல்பட அனுமதி அளிக்கக் கூடாது என மனு அளிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதன் தொடர்ச்சியாக சேவூர், முறியாண்டம்பாளையம், வேட்டுவபாளையம் ஊராட்சி தலைவர்கள், கிராமிய மக்கள் இயக்கம் தலைவர் சம்பத்குமார் ஆகியோர், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில், மனமகிழ் மன்றம் செயல்பட தடை விதிக்குமாறு எஸ்.பி.,யிடம் நேற்று மனு அளித்தனர்.