/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சொத்து வரி வசூல்; மாநகராட்சி தீவிரம்சொத்து வரி வசூல்; மாநகராட்சி தீவிரம்
சொத்து வரி வசூல்; மாநகராட்சி தீவிரம்
சொத்து வரி வசூல்; மாநகராட்சி தீவிரம்
சொத்து வரி வசூல்; மாநகராட்சி தீவிரம்
ADDED : பிப் 06, 2024 01:19 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சியிலுள்ள நான்கு மண்டலங்களில், 60 வார்டுகளுடன் அமைந்துள்ளது. மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குப்பை மேலாண்மை வரி, பாதாள சாக்கடை கட்டணம் ஆகியன உள்ளன.
இது தவிர, காலியிடங்களுக்கான வரி, மாநகராட்சிக்குச் சொந்தமான மார்க்கெட், வணிக வளாகம் போன்ற கட்டடங்களின் மீதான குத்தகை இனங்கள், மாத வாடகை ஆகியன வகையிலும் வருவாய் ஈட்டப்படுகிறது.நிதியாண்டு முடிவடையும் மார்ச் மாதம் நெருங்கி வரும் நிலையில், நிலுவையில் உள்ள வரியினங்களை வசூல் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இதற்காக, வீதிகள் தோறும் மைக் செட் கட்டிய ஆட்டோக்களில் வரி செலுத்துவது குறித்து அறிவிப்பு ஒளிபரப்பப்படுகிறது. சொத்து வரி குறித்த நிலுவை அறிவிப்பு நோட்டீஸ் வீடுதோறும் சென்று வழங்கும் பணியும் நடக்கிறது.