/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேங்காய் பருப்பு ஏலம்; ரூ.38 லட்சத்துக்கு விற்பனைதேங்காய் பருப்பு ஏலம்; ரூ.38 லட்சத்துக்கு விற்பனை
தேங்காய் பருப்பு ஏலம்; ரூ.38 லட்சத்துக்கு விற்பனை
தேங்காய் பருப்பு ஏலம்; ரூ.38 லட்சத்துக்கு விற்பனை
தேங்காய் பருப்பு ஏலம்; ரூ.38 லட்சத்துக்கு விற்பனை
ADDED : ஜன 04, 2024 01:01 AM
திருப்பூர்: வெள்ளகோவிலில் நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில், 38 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடைபெற்ற ஏலத்தில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மாவட்ட விவசாயிகள், 114 பேர், 54 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். மொத்தம், 750 மூட்டைகள் பருப்பு வரத்து வந்தது. தரமான முதல் தர பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ, 85.09 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 57.68 ரூபாய்க்கும் ஏலத்தில் விற்பனையானது. இந்த வார ஏலத்தில் மொத்தம், 38 லட்சத்து, 28 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.