/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தென்னைக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம்! வான்மழை கருத்தரங்கில் கருத்துதென்னைக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம்! வான்மழை கருத்தரங்கில் கருத்து
தென்னைக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம்! வான்மழை கருத்தரங்கில் கருத்து
தென்னைக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம்! வான்மழை கருத்தரங்கில் கருத்து
தென்னைக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம்! வான்மழை கருத்தரங்கில் கருத்து
ADDED : ஜன 31, 2024 12:33 AM

பல்லடம்:தென்னைக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று, பல்லடத்தில் நடந்த வான்மழை கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
பல்லடம் வனம் அமைப்பின் வான் மழை மாதாந்திர கருத்தரங்கம், வனாலயம் வளாகத்தில் நடந்தது. அதன் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார்.
செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். செயல் தலை வர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.
ஜனாதிபதி விருது பெற்ற பொள்ளாச்சியை சேர்ந்த விவேகானந்தன் பேசியதாவது:
தேங்காய் எண்ணெய்க்கு புண்களை ஆற்றும் தன்மை உள்ளது. இது தொடர்பாக அறிவியல் ரீதியாக ஆய்வு மேற்கொண்டோம். தென்னையில் பயன்படாத பொருட்களே இல்லை. கடந்த, 30 ஆண்டுகளாக தென்னையில் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை.
தென்னையில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது ஆராய்ச்சியின் முக்கியத்துவம். மதிப்பு கூட்டு பொருட்களில் தற்போது தேங்காயின் மதிப்பு கூடி வருகிறது. சீனா போன்ற நாடுகளில் கூட தேங்காய் பால் பயன்படுத்தப்படுகிறது.
தென்னையில் மதிப்பு கூட்டும் வாய்ப்புகளை பெருக்க வேண்டும். அதிக ஏற்றுமதி வாய்ப்புகள் தென்னைக்கு உள்ளன. தென்னையை பயன்படுத்தி அடுத்த கட்ட வாய்ப்புகளை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, ஞான சஞ்சீவனை குருகுலத்தின் நிறுவனர் சசிகுமார், இயற்கை மருத்துவர் அஸ்வதிகா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.