/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு அலுவலகங்களில் துாய்மை இயக்கம் துவக்கம் அரசு அலுவலகங்களில் துாய்மை இயக்கம் துவக்கம்
அரசு அலுவலகங்களில் துாய்மை இயக்கம் துவக்கம்
அரசு அலுவலகங்களில் துாய்மை இயக்கம் துவக்கம்
அரசு அலுவலகங்களில் துாய்மை இயக்கம் துவக்கம்
ADDED : ஜூன் 09, 2025 09:48 PM
- நமது நிருபர் -
உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி, அரசு அலுவலகங்களில் துாய்மை இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், துாய்மை இயக்கத்தை துவக்கிவைத்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:
தமிழக அரசு, துாய்மை தமிழ்நாடு நிறுவனம் என்கிற அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனத்தின் வாயிலாக, முதல்கட்டமாக, சுற்றுச்சூழல் தினத்தில் தமிழகம் முழுவதும், 1,077 அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில், அலுவலக கழிவுகளை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில், திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், பிளாஸ்டிக் கழிவு, மின்னணு கழிவுகள், உலோக கழிவு, காகிதம், கண்ணாடி கழிவுகள் சேகரிக்கப்பட உள்ளது.
கழிவுகளை நிலப்பரப்பில் குவித்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சேகரிக்கப்படும் கழிவுகளை, உயர் தொழில்நுட்பங்கள் வாயிலாக, சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு, மறுசுழற்சி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, உதவி திட்ட அலுவலர் சரவணன் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.