ADDED : மார் 22, 2025 11:05 PM

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2, மாசுக் கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் வடக்கு சார்பில், உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாசுக்கட்டுபாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர்கள் மன்னர் திப்புசுல்தான், சங்கரநாராயணன் பேசினர். மாணவ செயலர்கள் மதுகார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, செர்லின், நவீன்குமார், பிரவீன், ரூபினா, ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவியர், 'மழைநீரை சேமிப்போம், நிலத்தடி நீரை உயர்த்துவோம்' என்ற கோஷம் எழுப்பி, விழிப்புணர்வு பதாகை ஏந்தி, விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
முன்னதாக, கல்லுாரி வளாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் அகற்றினர். அதில், 150 கிலோ பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கப்பட்டு, மாநகராட்சி சுகாதார பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.