/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுத்தமான காற்று... துாய குடிநீர்... மரம் சூழ் குடியிருப்புகள் பசுமை நகரமாக திருப்பூர் பிரயத்தனம் சுத்தமான காற்று... துாய குடிநீர்... மரம் சூழ் குடியிருப்புகள் பசுமை நகரமாக திருப்பூர் பிரயத்தனம்
சுத்தமான காற்று... துாய குடிநீர்... மரம் சூழ் குடியிருப்புகள் பசுமை நகரமாக திருப்பூர் பிரயத்தனம்
சுத்தமான காற்று... துாய குடிநீர்... மரம் சூழ் குடியிருப்புகள் பசுமை நகரமாக திருப்பூர் பிரயத்தனம்
சுத்தமான காற்று... துாய குடிநீர்... மரம் சூழ் குடியிருப்புகள் பசுமை நகரமாக திருப்பூர் பிரயத்தனம்

மாசு இல்லாத சூழல்
காற்று மாசு தவிர்க்கப்பட்டு, சுத்தமான காற்றை மக்கள் சுவாசிக்க வேண்டும். மாசுபாடு இல்லாத சுத்தமான, சுத்திகரிக்கப்பட்ட நீர், வழங்கப்பட வேண்டும். வாகனங்களின் பேரிரைச்சல் தரும் ஹாரன் சப்தம் உள்ளிட்ட ஒலி மாசு தவிர்க்கப்பட வேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும்.
இயற்கை வளங்கள்
நகரின் உள்ள வீடுகள், சாலையோரங்கள் மற்றும் வாய்ப்புள்ள இடங்களில் மரம் வளர்த்து, அவை நிரந்தரமாக, நிழல் பரப்பும் பசுமைப் போர்வையாக மாற்றப்பட வேண்டும். இவ்வாறு, பசுமையை பாதுகாப்பதன் விளைவாக, மாவட்டத்தின் காலநிலை மாற்றம் என்பது, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும்.
பல்லுயிர் பெருக்கம்
வனம், அது சார்ந்த பகுதிகள், குளம், குட்டை, நீரோடை மற்றும் நீர்வழித்தடங்களை பராமரித்து, அதன் இயல்பு கெடாமல் பாதுகாக்க வேண்டும். அதன் வாயிலாக, சிறிய புல் இனம் துவங்கி, பூச்சி இனங்கள் வரையிலான இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டு, அவை பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்.
மக்கள் நல்வாழ்வு
மக்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில், மக்கள் இளைப்பாற பசுமை சூழல் நிறைந்த பூங்காக்கள், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சைக்கிள் பயணம் மேற்கொள்ள பிரத்யேக பாதை உள்ளிட்ட, மக்களின் உடற்பயிற்சிக்கான மற்றும் மன அழுத்தம் குறைப்பதற்கான அம்சங்கள் இடம் பெற வேண்டும்.
பொருளாதார மேம்பாடு
பசுமை நகரங்களில் சோலார், காற்றாலை மற்றும் நீர் மின்னாற்றல் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, அந்த நகரங்களின் பிரதான தொழில்களில் மாசு தவிர்க்கும் பசுமை தொழில்நுட்பங்களை புகுத்துவதும்; புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் ஊக்குவிக்கப்படுகிறது. அதோடு, சுற்றுலா, அது சார்ந்த பொருளாதாரமும் ஊக்குவிக்கப்படுகிறது.
நீர் மேலாண்மை
அரசு கட்டடங்கள் மற்றும் வீடுகளில், மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்; நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தவிர்க்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட நீர் பாதுகாப்பு மேலாண்மை அவசியம்.
கழிவு மேலாண்மை
வீடு உள்ளிட்ட வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை, கழிவுகளை பிரித்தெடுப்பது; மக்கும் குப்பையை உரமாக்குவது, மக்காத குப்பையை மறுசுழற்சி செய்வது; கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட நவீன திடக்கழிவு மேலாண்மை முறை பின்பற்றப்பட வேண்டும்.
பசுமை போக்குவரத்து
கார், டூவீலர் உள்ளிட்ட தனிப்பட்ட வாகன பயன்பாட்டை குறைத்து, பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிப்பது; அதற்கேற்ப, மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், சைக்கிள் வாயிலாக நகர வீதிகள் மற்றும் தங்கள் அலுவலகங்களுக்கு சென்று வர வசதியாக, சாலையோரம் பிரத்யேக பாதை அமைக்கப்பட வேண்டும்.
அங்கீகரிப்பது யார்?
பசுமை நகரங்களை உருவாக்குவதில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினரின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.