/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செம்மொழி நாள் விழா கட்டுரை - பேச்சுப்போட்டி செம்மொழி நாள் விழா கட்டுரை - பேச்சுப்போட்டி
செம்மொழி நாள் விழா கட்டுரை - பேச்சுப்போட்டி
செம்மொழி நாள் விழா கட்டுரை - பேச்சுப்போட்டி
செம்மொழி நாள் விழா கட்டுரை - பேச்சுப்போட்டி
ADDED : மே 10, 2025 02:44 AM

திருப்பூர், : செம்மொழி நாள் கட்டுரை போட்டியில் மாணவ, மாணவியர் தனித்திறமையை வெளிப்படுத்தி, வெற்றியை கைப்பற்றினர்.
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்ட அளவில், செம்மாழி நாள் கட்டுரை, பேச்சுப்போட்டிகள் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் இரண்டு நாட்கள் நடத்தப்படுகிறது. நேற்று, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்வளர்ச்சி துணை இயக்குனர் இளங்கோ துவக்கிவைத்தார்.
பேச்சுப்போட்டியில், கருவலுார் அரசு பள்ளி மாணவி நிரஞ்சனா தேவி முதல் பரிசு; திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளி மதுமிதா இரண்டாம் பரிசு; பல்லடம் ஆதர்ஷ் வித்யாலயா பப்ளிக் மாணவி வைஷ்ணவலட்சுமி மூன்றாம் பரிசுக்கு தேர்வாகினர்.
கட்டுரைப்போட்டியில், திருப்பூர், பாண்டியன் நகர் சாரதா வித்யாலயா மாணவி அனுஷா முதலிடம்; அம்மாபாளையம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா மாணவி பிரீத்தி இரண்டாமிடம்; கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி மாணவி அஸ்மிதா மூன்றாமிடம் பிடித்தனர். பேச்சு, கட்டுரை போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. முதல் பரிசு 10 ஆயிரம்; இரண்டாம் பரிசு 7 ஆயிரம்; மூன்றாம் பரிசு 5 ஆயிரம் ரூபாய் வீதம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் இன்று, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் நடைபெறுகின்றன.