Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திறம்பட முடிக்க ஆலோசனை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திறம்பட முடிக்க ஆலோசனை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திறம்பட முடிக்க ஆலோசனை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திறம்பட முடிக்க ஆலோசனை!

ADDED : மார் 18, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
திருப்பூர் : பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், 25ம் தேதியும், பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும், 27ம் தேதியும் நிறைவடைகிறது. மறுநாளே, (28ம் தேதி) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது.

தேர்வுக்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான மாவட்ட கல்வித்துறை ஆலோசனை கூட்டம், திருப்பூர், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து வரவேற்றார். தேர்வுகள் துறை உதவிஇயக்குனர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டம் முழுதும் இருந்து பத்தாம் வகுப்பு தேர்வு பணியில் ஈடுபட உள்ள முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட, 320 பேர் பங்கேற்றனர்.

மாவட்டத்தில் உள்ள, 348 பள்ளிகளில் பயிலும், 30 ஆயிரத்து, 235 மாணவ, மாணவியருக்கு, 108 இடங்களில் தேர்வு மையம் அமைப்பது, தேர்வறை ஒதுக்கீடு, வினாத்தாள்களை எடுத்துச் செல்வது, தேர்வு முடிந்த பின் விடைத்தாள்களை பாதுகாப்பாக கட்டி மாவட்ட பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்புவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் பேசியதாவது:

பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதன்முறையாக பொதுத்தேர்வு எழுத போகிறவர்கள். எனவே, தேர்வறையில் அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க அறை கண்காணிப்பாளர்களுக்கு, முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.

பொதுத்தேர்வு துவங்கி முடியும் வரை எவ்வித குளறுபடி, புகார்களுக்கு இடமளிக்காமல் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பு மற்றும் கடமையை உணர்ந்து அதற்கேற்ப திறம்பட பணியாற்ற வேண்டும். பறக்கும் படையினர் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, உதயகுமார் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us