/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; எந்த இடம் பெற போகிறது திருப்பூர்?நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; எந்த இடம் பெற போகிறது திருப்பூர்?
நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; எந்த இடம் பெற போகிறது திருப்பூர்?
நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; எந்த இடம் பெற போகிறது திருப்பூர்?
நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; எந்த இடம் பெற போகிறது திருப்பூர்?

நம்பிக்கை உள்ளது
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து கூறுகையில், ''கல்வியாண்டு துவக்கத்தில் இருந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தி, பாடங்களில் பின்தங்கிய மாணவர்களுக்கு தொடர் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு நான்கு மாதம் முன்பிருந்தே மாணவ, மாணவியரை பாட ஆசிரியர்கள் தயார் படுத்தியுள்ளனர். கடந்த முறை பெற்ற தேர்ச்சியை விட, நடப்பாண்டு முன்னேற்றமான தேர்ச்சியை மாணவ, மாணவியர் பெற்றுத் தருவர்; நம்பிக்கை உள்ளது,'' என்றார்.
முதலிடம் கிடைக்குமா?
பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச், 5ல் துவங்கியது; 27ம் தேதி வரை நடந்தது. பிளஸ் 1 தேர்ச்சியில், 2022-ல் 11வது இடம் பெற்ற திருப்பூர், 2023 ல் பத்து இடங்கள் முன்னேறி, முதலிடம் பெற்றது. பிளஸ் 2, பிளஸ் 1 இரண்டிலும் முதலிடம் பெற்ற மாவட்டம் என்ற பாராட்டு பெற்றது. 2024-ல் மூன்றாமிடம் பெற்ற திருப்பூர், நடப்பாண்டு எந்த இடம் என்பது நாளை (16ம் தேதி) மதியம் வெளியாகும் தேர்வு முடிவில் தெரியவரும்.


