Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விசைத்தறி தொழிலாளருக்கு மீண்டும் குழு காப்பீடு திட்டம்; சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்

விசைத்தறி தொழிலாளருக்கு மீண்டும் குழு காப்பீடு திட்டம்; சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்

விசைத்தறி தொழிலாளருக்கு மீண்டும் குழு காப்பீடு திட்டம்; சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்

விசைத்தறி தொழிலாளருக்கு மீண்டும் குழு காப்பீடு திட்டம்; சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்

ADDED : ஜூன் 11, 2025 06:34 AM


Google News
திருப்பூர்; விசைத்தறி தொழிலாளருக்கு வழங்கப்பட்டு வந்த குழு காப்பீட்டு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென, சி.ஐ. டி.யு., விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் (சி.ஐ.டி.யு.,) சங்கத்தின், 11வது பேரவை கூட்டம், இடுவாய் சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் உன்னிகிருஷ்ணன் பேரவையை துவக்கி வைத்தார்.

சீராணம்பாளையம் ஈஸ்வரன் கொடியேற்றி வைத்தார். சம்மேளன தலைவர் சந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசன் வாழ்த்தி பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், புதிய தலைவராக வேலுசாமி, பொது செயலாளராக முத்துசாமி, பொருளாளராக முருகன், துணை தலைவராக ஈஸ்வரன், சாமியப்பன், தங்கவேல், செயலாளர்களாக குப்புசாமி, பழனிசாமி, மணி தேர்வு செய்யப்பட்டனர்.

விசைத்தறி தொழிலாளருக்கான குழு காப்பீடு திட்டத்தை, 2019ல் அரசு நிறுத்திவிட்டது. அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். விசைத்தறி தொழிலாளருக்கு, எட்டு மணி நேர வேலைக்கு, மாதம், 26 ஆயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் இ.எஸ்.ஐ., - பி.எப்., சலுகைகளை உறுதி செய்ய வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர், விசைத்தறி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

விசைத்தறியாளர்களுக்கு, நெசவு கூலி ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தொழிற்சங்கங்களுடன் பேசி, தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us