/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்; தவறாமல் நடத்த அறிவுறுத்தல் குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்; தவறாமல் நடத்த அறிவுறுத்தல்
குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்; தவறாமல் நடத்த அறிவுறுத்தல்
குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்; தவறாமல் நடத்த அறிவுறுத்தல்
குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்; தவறாமல் நடத்த அறிவுறுத்தல்
ADDED : மார் 26, 2025 12:21 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், கிராமம், ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மண்டல அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டங்களை, மூன்று மாதத்துக்கு ஒருமுறை தவறாமல் நடத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரியாஸ் அகமது பாஷா தலைமைவகித்தார்.
அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கிராமம், ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் மண்டலம், மாவட்ட அளவில் குழந்தைகள் நல பாதுகாப்புக்குழு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தந்த பகுதி அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், போலீசார், ஆசிரியர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு துறை சார்ந்த, 14 பேர் குழந்தை பாதுகாப்புக்குழுவில் உறுப்பினராக அங்கம் வகிக்கின்றனர்.
குழந்தை திருமணங்களை தடுப்பது, பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வது உள்பட முக்கியமான பணிகளை குழந்தை பாதுகாப்புக்குழு மேற்கொள்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், கிராமம், ஒன்றியம், பேரூராட்சி, மண்டல அளவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டங்கள் சரிவர நடத்தப்படுவதில்லை.
இதனையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் உள்ள குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டங்களை தவறாமல் நடத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால், 1098 என்கிற சைல்டு ஹெல்ப் லைன் எண்ணில் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து, பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என, கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.