/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விஷம் கொடுத்த குழந்தை பலி; தாய் தற்கொலை முயற்சி விஷம் கொடுத்த குழந்தை பலி; தாய் தற்கொலை முயற்சி
விஷம் கொடுத்த குழந்தை பலி; தாய் தற்கொலை முயற்சி
விஷம் கொடுத்த குழந்தை பலி; தாய் தற்கொலை முயற்சி
விஷம் கொடுத்த குழந்தை பலி; தாய் தற்கொலை முயற்சி
ADDED : செப் 04, 2025 11:59 PM
திருப்பூர்; வெள்ளகோவில் அருகே, ஒரு வயது மகளுக்கு விஷம் கொடுத்து தாய், தற்கொலைக்கு முயன்றார்; இதில் குழந்தை இறந்தது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த முத்துார் அடுத்த காங்கயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர், முருகேசன், 47. அரசு பஸ் டிரைவர்.
அவரது மகள் லாவண்யா, 25. கடந்த 2 ஆண்டுகள் முன், உறவினரான கவுதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த, 8 மாதம் முன், மாரடைப்பால் கவுதம் இறந்தார். மன உளைச்சலில் இருந்த லாவண்யா, நேற்று, தனது வீட்டின் உட்புறம் தாழிட்டு, தன் மக ளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தியுள்ளார். அருகே இருப்பவர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்து சென்றனர்.
குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். லாவண்யா, சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.