/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்காத மையத்தடுப்பு? தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்காத மையத்தடுப்பு?
தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்காத மையத்தடுப்பு?
தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்காத மையத்தடுப்பு?
தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்காத மையத்தடுப்பு?
ADDED : மார் 20, 2025 12:37 AM

பல்லடம்: திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில், காங்கயம், பல்லடம், சூலுார் வழியாக, கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
கடந்த காலங்களில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, வெள்ளக்கோவில் -- பல்லடம் - காரணம்பேட்டை வரை, தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நெடுஞ்சாலையின் மையப்பகுதியில், விபத்துகளை தடுக்கும் நோக்கில், மைய தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளி காரணமாக, வாகன ஓட்டிகளுக்கு பாதை சரிவர தெரியாமல் விபத்து ஏற்படுகிறது.
இதனால், மைய தடுப்பு கற்கள் அமைக்கும்போது, இவற்றில், அரளிச்செடிகள் வளர்க்கப்படுவது வழக்கம். இவை, எதிரே வரும் வாகனங்களின் விளக்கு ஒளியில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாப்பதுடன், காற்றில் உள்ள கார்பன் உட்பட மாசுகளையும் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஆனால், பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மையத் தடுப்புகள், குறைந்த உயரத்துடன் உள்ளன. இதனால், எதிரே வரும் வாகனங்களால் ஏற்படும் கண்ணை கூசும் முகப்பு விளக்கு ஒளியால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
சமீபத்தில் நடந்த சில விபத்துகளில் கூட, மைய தடுப்புகளை தாண்டி வாகனங்கள் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அதிகளவு வாகன போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலை என்பதால், விபத்துகளை தடுக்க, மைய தடுப்பின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும்.
அல்லது மைய தடுப்பில் அரளிச்செடி வளர்க்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.