/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'திறன் வளர்க்க தொழில் தெளிவு அவசியம்' 'திறன் வளர்க்க தொழில் தெளிவு அவசியம்'
'திறன் வளர்க்க தொழில் தெளிவு அவசியம்'
'திறன் வளர்க்க தொழில் தெளிவு அவசியம்'
'திறன் வளர்க்க தொழில் தெளிவு அவசியம்'
ADDED : செப் 03, 2025 11:45 PM
திருப்பூர்; திருப்பூர், எல்ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டுத்துறை சார்பில், மூன்றாமாண்டு மாணவிகளுக்கு, 'போர்ட் போலியோ மேனேஜ்மென்ட்' என்ற தலைப்பில், இரு நாள் கருத்தரங்கு நடந்தது.
வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டு துறை தலைவர் உஷாதேவி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தமிழ் மலர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, எத்தியோப்பியா நாட்டின் கேப்ரி டெகர் பல்கலை மேனேஜ்மென்ட் அசோசியேட் பேரா சிரியை கார்த்திகா பங்கேற்று, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கி பேசுகையில், ''பணி அனுபவம் பெற, திறன் வளர்க்க, தொழில் சார்ந்த தெளிவு பெறுவது அவசியம்'' என்றார். கல்லுாரி பேராசிரியை நிர்மலா நன்றி கூறினார்.