Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ டூவீலர் மீது கார் மோதல்: மகன் கண் முன்னே தாய் பலி

டூவீலர் மீது கார் மோதல்: மகன் கண் முன்னே தாய் பலி

டூவீலர் மீது கார் மோதல்: மகன் கண் முன்னே தாய் பலி

டூவீலர் மீது கார் மோதல்: மகன் கண் முன்னே தாய் பலி

ADDED : மே 20, 2025 12:40 AM


Google News
தாராபுரம்; திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ரங்கபாளையத்தை சேர்ந்தவர் கனகமணி, 40; பனியன் தொழிலாளி. கணவனை இழந்த இவர், மகன் விஷ்ணு, 17, அனுஸ்ரீ, 15 மகளுடன் வசித்துவந்தார்.

மகன் பிளஸ் 1 முடித்து, பிளஸ் 2 வகுப்புக்கு செல்கிறார். இதற்கான கட்டணத்தை பள்ளியில் கட்டுவதற்காக, மகன் விஷ்ணு உடன் டூவீலரில் நேற்று பள்ளிக்குசென்றார். பணத்தை கட்டி விட்டு, வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, உடுமலை ரோட்டில், எவ்வித சிக்னலும் செய்யாமல், கார் திடீரென வலதுபுறம் திரும்பியது. அதில், டூவீலர் காரின்மீது மோதி விபத்து ஏற்பட்டது.

அதில் கனகமணி தலையில் காயமடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். காரில், மூலனுார் பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் இளம்பூரணம் இருந்தது தெரிய வந்தது. காரை ஓட்டி வந்த தேனியை சேர்ந்த ஜெயக்குமார், 46 என்பவரை தாராபுரம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us