Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ டிரான்ஸ்பார்மர் மீது மோதிய கார் 16 மணி நேரம் மின்சாரம் தடை

டிரான்ஸ்பார்மர் மீது மோதிய கார் 16 மணி நேரம் மின்சாரம் தடை

டிரான்ஸ்பார்மர் மீது மோதிய கார் 16 மணி நேரம் மின்சாரம் தடை

டிரான்ஸ்பார்மர் மீது மோதிய கார் 16 மணி நேரம் மின்சாரம் தடை

ADDED : மார் 18, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
அவிநாசி: அவிநாசியில், டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியது. இதனால், ஏற்பட்ட மின்தடை, 16 மணி நேரத்துக்கு பின் சீரானது.

அவிநாசி, கருவலுார் அருகே தொட்டக்களம்புதுார் பகுதியை சேர்ந்தவர், சசிகுமார் 42. அரசு போக்குவரத்து கழக அன்னுார் பணிமனையில் மெக்கானிக். தனது குடும்பத்தினருடன், நேற்று முன்தினம் பழநி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணியளவில் அவிநாசி, சீனிவாசபுரம் பகுதியில் கார் வந்தபோது ரோடு வளைவில் திருப்பாமல், இடதுபுற பள்ளத்தில் கார் இறங்கி, டிரான்ஸ்பார்மர் மீது பலமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த சீனிவாசன் மற்றும் குடும்பத்தினருக்கு காயம் ஏற்படவில்லை.

டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியதில், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அவிநாசி போலீசார் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். நேற்று காலை மின் ஊழியர்கள் கிரேன் உதவியுடன் டிரான்ஸ்பார்மரில் சிக்கியிருந்த காரை மீட்டனர். பழுது சீரமைக்கப்பட்டு, நேற்று மாலை, 6:00 மணிக்கு தான் மின் வினியோகம் சீரானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us