/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'லைசன்ஸ்' பெற வசதியாக ஆர்.டி.ஓ., ஆபீசிலேயே கார்'லைசன்ஸ்' பெற வசதியாக ஆர்.டி.ஓ., ஆபீசிலேயே கார்
'லைசன்ஸ்' பெற வசதியாக ஆர்.டி.ஓ., ஆபீசிலேயே கார்
'லைசன்ஸ்' பெற வசதியாக ஆர்.டி.ஓ., ஆபீசிலேயே கார்
'லைசன்ஸ்' பெற வசதியாக ஆர்.டி.ஓ., ஆபீசிலேயே கார்
ADDED : ஜன 05, 2024 01:17 AM

திருப்பூர்;கார் இல்லாதவர், விண்ணப்பித்து லைசன்ஸ் பெற முயற்சிக்கும் போது, அவருக்கான காரை (ஓட்டி காண்பிக்க மட்டும்) வட்டார போக்குவரத்து துறை அலுவலகமே வழங்குகிறது.
இலகு ரக வாகன லைசன்ஸ் பெற விரும்பும் பலர், தங்களுக்கென சொந்தமாக கார் இல்லாததால், பயிற்சி பள்ளிகளை அணுகுவதால், நேர விரயம் ஏற்படுவதுடன், கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதனை தவிர்க்க, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள காரை, ஓட்டி காண்பித்து, லைசன்ஸ் பெறும் திட்டம் கடந்த டிச., 25ம் தேதி போக்குவரத்து துறையால் அறிமுகம் செய்யப்பட்டது. மாநிலம் முழுதும் உள்ள, 91 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், 54 பகுதி நேர அலுவலகங்கள் என, 145 அலுவலகங்களுக்கு, 145 புதிய கார்கள் வாங்கப்பட்டுள்ளது. அவ்வகையில், திருப்பூர் தெற்கு, வடக்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்துக்கும் கார் வழங்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆர்.டி.ஓ., ஆனந்த் கூறுகையில், ''தங்களிடம் கார் இல்லாமல் இலகு ரக லைசன்ஸ் பெற விண்ணப்பிப்பவர்கள், ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். கார் ஓட்டி காண்பிக்க மைதானம் வரும் போது, புதிய கார் வழங்கப்படும். கியர், பிரேக் தன்மை குறித்து விண்ணப்பதாரருக்கு எடுத்துக்கூறப்படும். காரை சரியாக ஓட்டினால், விதிமுறைக்கு உட்பட்டு, லைசன்ஸ் வழங்கப்படும்,'' என்றார்.