ADDED : பிப் 06, 2024 01:40 AM
உடுமலை;மடத்துக்குளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், வேடபட்டி ஊராட்சி, சோழமாதேவிமேடு பகுதியில், 7 லட்சம் ரூபாய் பகுதியில் பயணியர் நிழற்கூரை அமைக்கப்பட்டது.
பணிகள் முடிந்த நிலையில், நேற்று, எம்.எல்.ஏ., மகேந்திரன், மக்கள் பயன்பாட்டிற்காக பயணியர் நிழற்கூரையை திறந்து வைத்தார். வேடப்பட்டி ஊராட்சித்தலைவர் துக்கைவேல், அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.