Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சந்திர கிரகணத்தைப் பார்க்கலாமா?

சந்திர கிரகணத்தைப் பார்க்கலாமா?

சந்திர கிரகணத்தைப் பார்க்கலாமா?

சந்திர கிரகணத்தைப் பார்க்கலாமா?

ADDED : செப் 04, 2025 11:56 PM


Google News
திருப்பூர்; ''நாளை மறுநாள் நிகழ உள்ள, முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம்'' என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வரும் 7ல் தென்படும் முழு சந்திர கிரகணத்தை பொது மக்களிடம் வானியல் திருவிழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவு மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. வரும் 7ம் தேதி இரவு 9:57 மணிக்கு தொடங்கி 8ம் தேதி நள்ளிரவு 1:26 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறும். இது சற்று வித்தியாசமாக சூரியனில் இருந்து வரும் ஒளி, பூமியின் வளிமண்டல மேற்பரப்பில் ஊடுருவி அதிக அலை நீளம் கொண்ட வண்ணங்களான சிவப்பு, ஆரஞ்சு நிலவின் மீது படும். அப்போது அடர் சிவப்பு நிறத்தில் நிலவு தோன்றும். இதைத்தான் 'பிளட் மூன்' என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.

வெறும் கண்ணால் பார்க்கலாம்: சந்திர கிரகணத்தில் எந்த கதிர்வீச்சும் இல்லை, வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.

அடுத்த சந்திர கிரகணம் 3 ஆண்டுகள் கழித்து டிசம்பர் 2028ல் தான் நாம் இருக்கும் பகுதியில் காண முடியும்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் வரும் 7ம் தேதி பல்வேறு இடங்களில் மாலை 6:00 மணி முதல் சந்திர கிரகண நிகழ்வை வானியல் திருவிழாவாக நடத்தத் திட்டமிடப்படடுள்ளனர். குறிப்பாக திருப்பூர் தெற்கு டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள கே.ஆர்.சி., சிட்டி சென்டர் வளாகத்தில் தொலைநோக்கி, பைனாக்குலர் மூலம் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

மேலும் திருப்பூர் வடக்கு தோட்டத்துப்பாளையம், பல்லடம் உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களிலும் அறிவியல் இயக்க தன்னார்வலர்கள், கருத்தாளர்கள் ஏற்பாட்டில் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கும், திரையிட்டு படக்காட்சி மூலம் விளக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும் இது பற்றிய விவரங்களுக்கு 9095339097 தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us