/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மீன் குஞ்சு கொள்முதலுக்கு மானியம் பெற அழைப்பு மீன் குஞ்சு கொள்முதலுக்கு மானியம் பெற அழைப்பு
மீன் குஞ்சு கொள்முதலுக்கு மானியம் பெற அழைப்பு
மீன் குஞ்சு கொள்முதலுக்கு மானியம் பெற அழைப்பு
மீன் குஞ்சு கொள்முதலுக்கு மானியம் பெற அழைப்பு
ADDED : ஜூன் 20, 2025 02:16 AM
திருப்பூர் : மீன் குஞ்சு கொள்முதலுக்கு உள்ளீட்டு மானியம் பெற, மீன் வள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
திருப்பூர் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்த, மீன் வள விவசாயிகளுக்கு, அரசு அறிவித்த உள்ளீட்டு மானியம் வழங்கப்பட உள்ளது.
ஒரு எக்டருக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் மீன் குஞ்சுகள் கொள்முதலுக்கு, 5 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மீன் வளர்ப்பு விவசாயிகள், இந்த திட்டத்தில் மீன் குஞ்சு கொள்முதல் செய்வதற்கான மானியம் பெற்று பயன் பெற வேண்டும்.
திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை பெறவும், விண்ணப்பங்கள் பெறுவதற்கும், தாராபுரம், கோனேரிப்பட்டியில் இயங்கி வரும் மீன் வள ஆய்வாளர் அலுவலகத்தை அணுகலாம். 89037 46476 என்கிற எண்ணிலும், ஈரோடு மீன் வளத்துறை அலுவலகத்தை, 94431 47739, 0424 - 2221912 என்கிற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.