ADDED : ஜன 28, 2024 11:51 PM

பல்லடம்;சமீபத்தில், திருப்பூர் அருகே இடுவாய் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் இருந்த ஆடுகள் மற்றும் கோழிகளை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து சூறையாடின.
இதேபோல், பல்லடம் அடுத்த கள்ளிப்பாளையம் பகுதியில், தெரு நாய்களின் தாக்குதலால் இரண்டு கன்று குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன. நேற்று, சித்தம்பலம் எஸ்.ஏ.பி., நகர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள், விவசாயி ஒருவரின் கன்றுக்குட்டியை கடித்து குதறியதில் கன்றுக்குட்டி உயிரிழந்தது.
இவ்வாறு, தெரு நாய்களின் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.