/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'பார்' ஆக பயன்படும் பஸ் ஸ்டாப் நிழற்கூரை 'பார்' ஆக பயன்படும் பஸ் ஸ்டாப் நிழற்கூரை
'பார்' ஆக பயன்படும் பஸ் ஸ்டாப் நிழற்கூரை
'பார்' ஆக பயன்படும் பஸ் ஸ்டாப் நிழற்கூரை
'பார்' ஆக பயன்படும் பஸ் ஸ்டாப் நிழற்கூரை
ADDED : ஜூன் 29, 2025 11:29 PM
உடுமலை; உடுமலை, குறிச்சிக்கோட்டையில், பஸ் ஸ்டாப் நிழற்கூரை, மது அருந்தும் இடமாக மாறி வருவதால், பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாமல் உள்ளது.
குறிச்சிக்கோட்டை ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பஸ் ஸ்டாப் நிழற்கூரை, பல காலமாக சிதிலமடைந்த நிலையில் இருப்பதால், பயணியர் அதை பயன்படுத்துவதில்லை. இதனால், திறந்த வெளியில் பஸ்சுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.
சுவர்களில் தவறான வார்த்தைகளை எழுதியிருப்பது, மது அருந்திய டம்ளர்கள், எச்சில் கரை உள்ளிட்ட காட்சிகளே அங்கு உள்ளன.
பயன்பாடில்லாமல் உள்ள நிழற்கூரை, மாலை நேரங்களில் மது அருந்தவும், சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடவும், பயன்படுத்தப்படுகிறது.
இரவில், அவ்விடத்தில் காத்திருக்கவும் பெண்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடத்திலும் 'குடி'மகன்கள் சிறிதும் பயமில்லாமல் நிழற்கூரையை அசுத்தமாக்குகின்றனர்.
ஊராட்சி நிர்வாகமும் இதனை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது மக்களை வேதனைக்குள்ளாக்குகிறது. மாலை நேரத்தில், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணியரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.