/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வெறிச்சோடும் பஸ் ஸ்டாண்ட்கள்; இரவில் பரிதவிக்கும் பயணிகள் வெறிச்சோடும் பஸ் ஸ்டாண்ட்கள்; இரவில் பரிதவிக்கும் பயணிகள்
வெறிச்சோடும் பஸ் ஸ்டாண்ட்கள்; இரவில் பரிதவிக்கும் பயணிகள்
வெறிச்சோடும் பஸ் ஸ்டாண்ட்கள்; இரவில் பரிதவிக்கும் பயணிகள்
வெறிச்சோடும் பஸ் ஸ்டாண்ட்கள்; இரவில் பரிதவிக்கும் பயணிகள்
ADDED : ஜூன் 12, 2025 12:28 AM

திருப்பூர் : 'திருப்பூரில், மூன்று பஸ் ஸ்டாண்ட் உள்ள நிலையில், இரவு நேரங்களில், ஒரு பஸ் ஸ்டாண்டில் இருந்து இன்னொரு பஸ் ஸ்டாண்ட் செல்ல போதிய எண்ணிக்கையில் பஸ் இல்லை' என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
திருப்பூரில் புதிய மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி என மூன்று இடங்களில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. நகரில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, தென் மாவட்டத்தில் இருந்து வரும் பஸ்கள் தாராபுரம் ரோடு, கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்தும்; திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும்; ஈரோடு, கோவை, சேலம் மார்க்கமாக செல்லும் பஸ்கள், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு வெளியூர்களுக்கு பஸ் இயக்கப்படும் நிலையில், ஒரு பஸ் ஸ்டாண்டில் இருந்து மற்றொரு பஸ் ஸ்டாண்ட்டுக்கு செல்ல போதியளவில் டவுன் பஸ்கள் இல்லை.
குறிப்பாக, இரவு, 10:00 மணிக்கு பின் நள்ளிரவு வரை, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல பஸ்கள் இல்லாததால், தென் மாவட்டங்களில் இருந்து கோவில்வழி வந்திறங்குபவர்கள், அங்கிருந்து நகருக்குள் வர முடியாமல் தவிக்கின்றனர்.
திருப்பூரில் ஏழு ஆண்டுகளுக்கு முன், 'பி.பி.,' எனப்படும் 'பாய்ன்ட் டூ பாய்ன்ட்' (முனைப் பேருந்து) இரு பஸ்கள் இயக்கப்பட்டன. காலை முதல் இரவு வரை, புதிய பஸ் ஸ்டாண்ட் - மத்திய பஸ் ஸ்டாண்ட் இடையே இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன், மத்திய பஸ் ஸ்டாண்ட் வழியாக கோவில்வழிக்கு பஸ் இயக்கப்படுகிறது. பகல் நேரத்தில் ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு முறை இயங்கும் இந்த பஸ்; இரவு 8:00 மணிக்கு பின் இயக்கப்படுவதில்லை.
மூன்று பஸ் ஸ்டாண்ட்டுகளில், மத்திய பஸ் ஸ்டாண்டிலே அதிகளவில் பஸ்கள் வருகிறது. பனியன் தொழிலை நம்பியுள்ள பலரும் இரவு, 9:00 - 10:00 மணிக்கு வேலை முடித்து, அதன் பின் ஊருக்கு திரும்பகின்றனர். இரவு 10:00 மணிக்கு டவுன் பஸ் ரேக் காலியாகி விடுகிறது.
தனியார், மினி பஸ் இயக்கமும் நிறுத்தப்பட்டு விடுவதால், தொழிலாளர் வீடு போய் சேர முடியாமல் விழிபிதுங்கி நிற்பதை பார்க்க முடிகிறது.