/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திறந்தும் பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்; மக்கள் அதிருப்தி திறந்தும் பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்; மக்கள் அதிருப்தி
திறந்தும் பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்; மக்கள் அதிருப்தி
திறந்தும் பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்; மக்கள் அதிருப்தி
திறந்தும் பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்; மக்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 06, 2025 12:54 AM

உடுமலை; உடுமலையில், கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திறந்தும் பயன்பாட்டுக்கு கொண்டுவராததால், தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டில் நெரிசல் அதிகரித்துள்ளது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து டவுன் பஸ்கள் என, 300க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வரும் நிலையில், பஸ்கள் வந்து செல்லவும், அவர்கள் அமரவும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பஸ் ஸ்டாண்டில் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பழநி ரோட்டில், கூடுதல் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. 15 பஸ்கள் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கூடுதல் பஸ் ஸ்டாண்ட், தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது. ஆனால் , பஸ்கள் வந்து செல்லவும், பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், வீணாக உள்ளது.
இதனால், தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் உள்ளே சென்று திரும்ப முடியாத அளவிற்கு நெரிசல் அதிகரித்துள்ளது. பஸ் ஏறும் மக்கள் பஸ்கள் நிற்கும் பகுதி தெரியாமல், அலைக்கழிக்கப்படுகின்றனர்.
எனவே, கூடுதல் பஸ் ஸ்டாண்டை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், குடிநீர், பயணியர் இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள, போக்குவரத்து துறை ,போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.