/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/லஞ்சப் புகார் எதிரொலி; 24 மணி நேரத்தில் வரிவிதிப்புலஞ்சப் புகார் எதிரொலி; 24 மணி நேரத்தில் வரிவிதிப்பு
லஞ்சப் புகார் எதிரொலி; 24 மணி நேரத்தில் வரிவிதிப்பு
லஞ்சப் புகார் எதிரொலி; 24 மணி நேரத்தில் வரிவிதிப்பு
லஞ்சப் புகார் எதிரொலி; 24 மணி நேரத்தில் வரிவிதிப்பு
ADDED : பிப் 23, 2024 11:42 PM
திருப்பூர்:காலியிடத்துக்கு வரி விதிப்பு செய்ய பணம் கேட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், 24 மணி நேரத்துக்குள் ஊழியர் அவரை தேடிப்பிடித்து வரி விதிப்பு செய்து தந்தனர்.
திருப்பூர், சந்திராபுரத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மனைவி கலாமணி. இவருக்கு, விசாலாட்சி நகரில், 3.5 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்துக்கு காலியிட வரி விதிப்பு செய்ய மாநகராட்சி, 3வது மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதன்பேரில் ஆய்வு நடந்தது. ஆனால், வரி விதிப்பு நோட்டீஸ் வழங்கப்படவில்லை.
வரி விதிப்பு செய்ய, மாநகராட்சி ஊழியர்கள், 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்பதாக புகார் எழுந்தது. இது குறித்து நேற்று முன்தினம் மாநகராட்சி குறை கேட்பு பிரிவுக்கு ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்கப்பட்டது.
அதிகாரிகள் விசாரணை நடத்தி, அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை, மாநகராட்சி வருவாய் பிரிவு ஊழியர்கள் இதற்கான நோட்டீசை நேரில் சென்று கலாமணியிடம் வழங்கினர்.
அதன்பின், அவரை அலுவலகம் அழைத்து கொண்டு, உடனடியாக அவரது காலியிடத்துக்கான நிலுவை உள்ளிட்ட வரியாக, 8,708 ரூபாயைப் பெற்றுக் கொண்டு ரசீதை வழங்கினர். புகார் தெரிவித்த 24 மணி நேரத்துக்குள் அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.