/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிராமண சேவா சமிதியின் சமஷ்டி உபநயன நிகழ்ச்சி பிராமண சேவா சமிதியின் சமஷ்டி உபநயன நிகழ்ச்சி
பிராமண சேவா சமிதியின் சமஷ்டி உபநயன நிகழ்ச்சி
பிராமண சேவா சமிதியின் சமஷ்டி உபநயன நிகழ்ச்சி
பிராமண சேவா சமிதியின் சமஷ்டி உபநயன நிகழ்ச்சி
ADDED : மே 18, 2025 10:53 PM

உடுமலை, ; உடுமலை பிராமண சேவா சமிதி பொதுக்குழு கூட்டம் மற்றும் குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயன நிகழ்ச்சி ராமய்யர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தையொட்டி, குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, பெண் தொழில் முனைவோர் நிகழ்ச்சிகள், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து உடுமலை பிராமண சேவா சமிதி மற்றும் ராமய்யர் திருமண மண்டபம் அறக்கட்டளை சார்பில், 5 குழந்தைகளுக்கு, காலை, 10:00 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் சமஷ்டி உபநயனம் மற்றும் பிரம்மோபதேசம் வாத்தியார் ரமேஷ் தலைமையில் நடந்தது.
முன்னதாக, காலை, 6:00 மணிக்கு உதக சாந்தி காப்புக்கட்டு, பாலிகை, பூர்வாங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
சமஷ்டி உபநயன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமிதி தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ஹரி, பொருளாளர் வெங்கட்ராமன் செய்திருந்தனர். திரளான மக்கள் பங்கேற்று, குழந்தைகளை வாழ்த்தினர்.