/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வரப்பிரசாதம்! நவீன 'கேன்சர்' சிகிச்சை மையம்; திருப்பூரில் அமைக்க பூமி பூஜைவரப்பிரசாதம்! நவீன 'கேன்சர்' சிகிச்சை மையம்; திருப்பூரில் அமைக்க பூமி பூஜை
வரப்பிரசாதம்! நவீன 'கேன்சர்' சிகிச்சை மையம்; திருப்பூரில் அமைக்க பூமி பூஜை
வரப்பிரசாதம்! நவீன 'கேன்சர்' சிகிச்சை மையம்; திருப்பூரில் அமைக்க பூமி பூஜை
வரப்பிரசாதம்! நவீன 'கேன்சர்' சிகிச்சை மையம்; திருப்பூரில் அமைக்க பூமி பூஜை
ADDED : ஜன 11, 2024 07:05 AM

திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நவீன 'கேன்சர்' சிகிச்சை மையத்திற்கு, நேற்று பூமி பூஜை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் மாநகராட்சியுடன் ரோட்டரி அமைப்புகள் இணைந்து, தமிழக அரசின், 'நமக்கு நாமே' திட்டத்தில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நவீன மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய கேன்சர் சிகிச்சை மையம் அமைக்கவுள்ளன.
இதில், பொதுமக்களின் பங்களிப்பாக, 30 கோடி ரூபாய், அரசு பங்களிப்பாக, 60 கோடி ரூபாய் செலுத்தப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் கிறிஸ்துராஜ், தலைமை வகித்தார். திருப்பூர் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவர் முருகநாதன், வரவேற்றார். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர், பூமி பூஜையை துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டினர்.
அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''அரசின் நமக்கு நாமே திட்டத்தில், 90 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் மெகா திட்டமாக, இந்த சிகிச்சை மையம் இருக்கும்,'' என்றார்.
திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல், தலைவர் சுப்ரமணியம், 4வது மண்டல தலைவர் பத்மநாபன், திருப்பூர் ரோட்டரி பொது நல அறக்கட்டளை செயலாளர் இளங்குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
---
தென்னிந்தியாவின் பெருமை (படம்)
தென்னிந்தியாவில் மிகச்சிறந்த சிகிச்சை மையமாக இது உருவவெடுக்கப் போகிறது. 150 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்குரிய வசதிகள் செய்யப்பட உள்ளன. ஏற்கனவே, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை வழங்கப்படுகிறது; 150 நோயாளிகள் பதிவு செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மருந்து, மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையம் வந்தால், ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து, குணப்படுத்த முடியும்.
- டாக்டர். முருகநாதன்
திருப்பூர் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவர்
62 ஆயிரம் சதுர அடியில்...
(படம்)
மொத்தம், 62 ஆயிரத்து 355 சதுர அடியில், தரை தளம் மற்றும், 5 அடுக்கு கட்டடமாக, இந்த சிகிச்சை மையம் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக, 5,000 சதுர அடியில், 'பங்கர்' எனப்படும், கேன்சர் நோய்க்கு சிகிச்சை வழங்கும் உபகரணம் பொருத்துவதற்கான கட்டடம் கட்டப்பட உள்ளது; சுவர் உள்ளிட்ட கட்டுமானங்கள் (ரெடிமேடு) வாங்கி வந்து பொருத்தும், 'பிரி காஸ்ட்' தொழில்நுட்பத்தில் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், முதற்கட்டப்பணி, 6 மாதத்தில் முடிவடையும்; பணி தரமானதாகவும் இருக்கும்.
- நந்தகோபால்
நிர்வாக இயக்குனர் டீமேஜ் பிரிகாஸ்ட் பில்டர்ஸ்
திரண்ட நன்கொடை
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், சிகிச்சை மையத்துக்கு பங்களிப்பு தொகையாக, எனது குடும்பத்தின் சார்பில், 25 லட்சம் ரூபாய் வழங்கவதாக கூறினார். அதேபோல், 'பிருத்வி' உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தினர், 20 லட்சம் ரூபாய் என பல்வேறு நிறுவனத்தினர் தங்களின் பங்களிப்புத் தொகையை வழங்கினர்; சிலர், தொகை வழங்குவதாக உறுதியளித்தனர்.