/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/புத்தகத்திருவிழா மாணவர் திறனாய்வு போட்டிகள் :மாணவர்கள் வரும் 7ல் பங்கேற்கலாம்புத்தகத்திருவிழா மாணவர் திறனாய்வு போட்டிகள் :மாணவர்கள் வரும் 7ல் பங்கேற்கலாம்
புத்தகத்திருவிழா மாணவர் திறனாய்வு போட்டிகள் :மாணவர்கள் வரும் 7ல் பங்கேற்கலாம்
புத்தகத்திருவிழா மாணவர் திறனாய்வு போட்டிகள் :மாணவர்கள் வரும் 7ல் பங்கேற்கலாம்
புத்தகத்திருவிழா மாணவர் திறனாய்வு போட்டிகள் :மாணவர்கள் வரும் 7ல் பங்கேற்கலாம்
ADDED : ஜன 04, 2024 11:31 PM
உடுமலை;திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியர்களுக்கான கலை, இலக்கிய திறனாய்வு போட்டிகள் வரும், 7ம் தேதி நடக்கிறது.
தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், 20வது திருப்பூர் புத்தகத்திருவிழா, வரும் 25 முதல் பிப்., 4ம் வரை, காங்கயம் ரோடு வேலன் ஹோட்டல் வளாகத்தில் நடக்கிறது.
ஆண்டு தோறும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியரின் கலை இலக்கிய திறனாய்வுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு, மாணவ, மாணவியருக்கான, இப்போட்டிகள் வரும், 7ம் தேதி, உடுமலை தளி ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நடக்கிறது.
ஒன்று முதல், 5ம் வகுப்பு, 6 முதல், 8ம் வகுப்பு மற்றும், 9 முதல், 12ம் வகுப்பு வரை, என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
1 முதல், 5ஆம் வகுப்பு வரையிலான, மாணவர்களுக்கான ஓவியப்போட்டிக்கு, 'என்னுடைய வீடு', 'தேசத்தலைவர்கள்', 'எனது வகுப்பறை', 'வனவிலங்குகள்' ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் ஓவியம் வரையலாம்.
6 முதல், 8ம் வகுப்பு வரை ஓவியப்போட்டிக்கு, 'மழை வெள்ளம்', 'சந்திரயான்', 'பிடித்த விளையாட்டு', 'பொங்கலோ பொங்கல்' ஆகிய தலைப்புகளில், ஏதேனும் ஒன்றில் ஓவியம் வரைய வேண்டும்.
இதே பிரிவு மாணவர்கள், கட்டுரைப்போட்டிக்கு, 'குப்பையில்லா ஊர்', 'பூமி பந்தை காப்போம்', 'ஆண்ட்ராய்டு அரக்கன்', 'வெற்றி தோல்வி' என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பிரிவில், ஓவியப்போட்டிக்கு, 'என்னை கவர்ந்த கேலிச்சித்திரம்', 'குருவிக்கூடு', 'சிங்கப்பெண்ணே', 'பசுமை தேசம்' ஆகிய தலைப்புகளில் ஓவியம் வரையலாம்.
இப்பிரிவு மாணவர்கள், கட்டுரைப்போட்டிக்கு, 'சரித்திரம்', 'தேர்ச்சி கொள்', 'போரிடும் உலகத்தை வேரறுப்போம்', 'இணையமும்; இன்றைய தலைமுறையும்', 'உலகை உலுக்கும் காலநிலை மாற்றம்' ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில், கட்டுரை எழுத வேண்டும்.
இதே பிரிவில் கவிதை போட்டிக்கு, போட்டி நடைபெறும் நாளில் அந்தந்த மையத்தில், காலை, 10:00 மணியளிவில், கவிதை போட்டிகளுக்கான தலைப்பு வழங்கப்படும்.
இப்போட்டிக்கு எழுத தேவையான தாள்கள் மற்றும் படம் வரைவதற்கான சார்ட் ஆகியவை அங்கேயே தரப்படும். போட்டியின் போது எழுதி தர வேண்டும். கட்டுரை அதிகப்பட்சம் நான்கு பக்கம், கவிதை அதிகப்பட்சம் இரண்டு பக்கம் இருக்க வேண்டும்.
மாணவர்கள் தங்களது பெயர், வகுப்பு, பள்ளி தொலைபேசி எண் ஆகியவற்றை, தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மாணவ, மாணவியர் காலை, 9:00 மணிக்குள் போட்டி நடைபெறும் அரங்கில் இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்போர், ஏதோ ஒரு மையத்தில் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு, வரும் 30ம் தேதி, மாலை புத்தகத்திருவிழா வளாகத்தில், பரிசுகள் வழங்கப்படும் என, புத்தகத்திருவிழா குழுவினர் தெரிவித்தனர்.