/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளி, கல்லுாரிகளில் களைகட்டிய பொங்கல் விழா 'பொங்கிய' உற்சாகம்!பள்ளி, கல்லுாரிகளில் களைகட்டிய பொங்கல் விழா 'பொங்கிய' உற்சாகம்!
பள்ளி, கல்லுாரிகளில் களைகட்டிய பொங்கல் விழா 'பொங்கிய' உற்சாகம்!
பள்ளி, கல்லுாரிகளில் களைகட்டிய பொங்கல் விழா 'பொங்கிய' உற்சாகம்!
பள்ளி, கல்லுாரிகளில் களைகட்டிய பொங்கல் விழா 'பொங்கிய' உற்சாகம்!

குமரன் கல்லுாரி
திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாணவியர் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். புதுப்பானை, செங்கரும்பு, மஞ்சள், பச்சரிசி, மண்டை வெல்லம் சகிதமாக மாணவியர் புத்தாடைகளுடன் ஆஜராகினர். கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்து, விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் ஒருங்கிணைத்தார்.
சமத்துவ பொங்கல்
திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டுக்கு உட்பட்ட, பாரப்பாளையம் பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. பள்ளி, மாணவியர் அழகிய வண்ண கோலமிட்டு அலங்கரித்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அருணா, மாநகராட்சி எதிர்க்கட்சி கவுன்சிலர் குழு தலைவர் அன்பகம் திருப்பதி முன்னிலையில், பொங்கல் வைத்து, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
அவிநாசியில்...
அவிநாசி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பொங்கல் விழா மாணவர்களுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி, கவுன்சிலர் பரஹத்துல்லா, பள்ளி மேலாண்மை குழு தலைவி கீதா, உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.