/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'கடிவாளம்' போட்ட உயிரியல்; 'வாழ' வைத்த வரலாறு! 'கடிவாளம்' போட்ட உயிரியல்; 'வாழ' வைத்த வரலாறு!
'கடிவாளம்' போட்ட உயிரியல்; 'வாழ' வைத்த வரலாறு!
'கடிவாளம்' போட்ட உயிரியல்; 'வாழ' வைத்த வரலாறு!
'கடிவாளம்' போட்ட உயிரியல்; 'வாழ' வைத்த வரலாறு!

'சென்டம்' கஷ்டம்
பல்லடம், வி.கள்ளிப்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி, உயிரியல் ஆசிரியர் கோமதி கூறுகையில், ''15 ஒரு மதிப்பெண்ணில், பத்து பாடங்களுக்கு பின்புறம் உள்ளது. ஐந்து, பாடத்துக்குள் இருந்து, யோசித்து விடை காணும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. நன்றாக படிக்கும் மாணவ, மாணவியரின் திறமையை பரிசோதிக்கும் வகையில் ஒரு மதிப்பெண் கேட்கப்பட்டுள்ளது. மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண், கட்டாய வினாக்கள் எளிமை என்பதால், நிச்சயம் நல்ல மதிப்பெண்களை வாங்குவர். தேர்ச்சி சதவீதம் பாதிக்காது; ஆனால், சென்டம் பெறுவது கடினம்,' என்றார்.
தேர்ச்சி அதிகரிக்கும்
நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விமல்பிரகாஷ் கூறுகையில், ''இரண்டு ஆண்டுகளாக இல்லாத வகையில், வினாத்தாள் எளிமையாக இருந்தது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி. இதனால், வரலாறு பாடத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். கட்டாய வினா உட்பட அனைத்து பகுதியிலும் மாணவர் பயிற்சி பெற்ற வினாக்களும் இடம் பெற்றிருந்தது,'' என்றார்.