/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பொதுத்தேர்வில் மகுடம் சூடிய பாரதி கிட்ஸ் ஷேத்ராலயா பள்ளி பொதுத்தேர்வில் மகுடம் சூடிய பாரதி கிட்ஸ் ஷேத்ராலயா பள்ளி
பொதுத்தேர்வில் மகுடம் சூடிய பாரதி கிட்ஸ் ஷேத்ராலயா பள்ளி
பொதுத்தேர்வில் மகுடம் சூடிய பாரதி கிட்ஸ் ஷேத்ராலயா பள்ளி
பொதுத்தேர்வில் மகுடம் சூடிய பாரதி கிட்ஸ் ஷேத்ராலயா பள்ளி
ADDED : மே 20, 2025 12:35 AM

திருப்பூர்; பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 பொதுதேர்வில் பாரதி கிட்ஸ் ஷேத்ராலயா பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி பஸ் ஸ்டாப் அருகே பாரதி கிட்ஸ் ஷேத்ராலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது நடந்து முடிந்துள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுதேர்வில் நுாறு சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 வகுப்பில், மாணவி ஜீவிகா, 587 மதிப்பெண் பெற்று முதலிடம். நிவாஷினி, 578 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், பிளஸ் 1 வகுப்பில், மாணவி அஸ்வனா, 578 மதிப்பெண் பெற்று முதலிடம், குரு கிருத்திஷ், 586 மதிப்பெண் பெற்றனர். பத்தாம் வகுப்பில், மாணவர் நிகிலேஷ், 494 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி பயாஷினி, 494 மதிப்பெண் இரண்டாமிடம் மற்றும் மாணவி ஓவியா, 493 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் வந்இ அசத்தியுள்ளனர்.
பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், ஊக்கமளித்த ஆசிரியர்கள் ஆகியோரை பள்ளி தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
பள்ளியில், ப்ரிகே.ஜி., முதல் பிளஸ்1 வரை அட்மிஷன் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு, 0421 - 2208573, 2239299 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என பள்ளி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.