/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரூ.2.10 லட்சம் மோசடி பெங்களூரு ஆசாமி கைது ரூ.2.10 லட்சம் மோசடி பெங்களூரு ஆசாமி கைது
ரூ.2.10 லட்சம் மோசடி பெங்களூரு ஆசாமி கைது
ரூ.2.10 லட்சம் மோசடி பெங்களூரு ஆசாமி கைது
ரூ.2.10 லட்சம் மோசடி பெங்களூரு ஆசாமி கைது
ADDED : செப் 20, 2025 11:48 PM
திருப்பூர் : திருப்பூர், பூலுவபட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன். அவரது மொபைல் போன் வாட்ஸ் ஆப்பில், ஆர்.டி.ஓ., சலான் என்ற ஏ.பி.கே., பைல் வந்துள்ளது.அந்த லிங்க்கில் அவர் நுழைந்து பதிவிறக்கம் செய்த போது, அவரது வங்கி கணக்கிலிருந்து 2.10 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது.
மேலும் அவர் இணைந்திருந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் அனைவருக்கும் இந்த ஏ.பி.கே., பைல் பரவியது. இது குறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இதில் ஈடுபட்டது பெங்களூருவை சேர்ந்த ராகுல் மண்டல், 25 என தெரிந்தது. அங்கு விரைந்த சைபர் கிரைம் போலீசார் ராகுல் மண்டலைக் கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.
அவரிடமிருந்து மொபைல் போன்கள், சிம் கார்டுகள் மற்றும் தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
'ஆன்லைன்' வாயிலாக வரும் மெசேஜ்கள், போலியான லிங்க்கள், அதிக வட்டி முதலீடுகள் போன்றவை குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என போலீசார் தெரிவித்தனர்.