/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பி.ஏ.பி., நீர் பங்கீடு; அதிகாரிகள் ஆய்வு பி.ஏ.பி., நீர் பங்கீடு; அதிகாரிகள் ஆய்வு
பி.ஏ.பி., நீர் பங்கீடு; அதிகாரிகள் ஆய்வு
பி.ஏ.பி., நீர் பங்கீடு; அதிகாரிகள் ஆய்வு
பி.ஏ.பி., நீர் பங்கீடு; அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூன் 07, 2025 11:14 PM
திருப்பூர்: கடைமடை பகுதிக்கு முறையாக நீர் வராதது குறித்த விவசாயிகளின் புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தில் கடைமடை பகுதிகளான காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் கடைமடையாக உள்ள சில பகுதிகளுக்கு சரிவர தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதிகளை ஆய்வு செய்ய, நீர்வளத்துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் குழு சென்றது.
காங்கயம், முள்ளிபுரம், வீர சோழபுரம், வெள்ளக்கோவில், அத்தாம்பாளையம் மற்றும் இலுப்பை கிணறு ஆகிய கடைமடை பகுதிகளில் மூன்றாம் மண்டலம், நான்காம் சுற்று பாசனம் நடைபெற்று வரும் பகுதிகளில் நீர் அளவீடு மற்றும் நீர் பங்கீடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆய்வின் போது, பி.ஏபி, வடிநிலம், பொள்ளாச்சி கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், திருமூர்த்திக்கோட்டம், உடுமலைப்பேட்டை செயற்பொறியாளர் பிரபாகரன், ஆழியாறு வடிநில கோட்டம், பொள்ளாச்சி செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், பாசன விவசாய சங்க தலைவர் செந்தில்வேல் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.