/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஐ.ஏ.எஸ்., அதிகாரி கண்காணிப்பில் பி.ஏ.பி., திட்டம்ஐ.ஏ.எஸ்., அதிகாரி கண்காணிப்பில் பி.ஏ.பி., திட்டம்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி கண்காணிப்பில் பி.ஏ.பி., திட்டம்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி கண்காணிப்பில் பி.ஏ.பி., திட்டம்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி கண்காணிப்பில் பி.ஏ.பி., திட்டம்
ADDED : பிப் 24, 2024 12:05 AM

திருப்பூர்;'பி.ஏ.பி., பாசன திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலான அதிகாரியை நியமிக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலம், பாசன வசதி பெறுகிறது.
திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்பட்டு, 126 கி.மீ., நீளமுள்ள பிரதான கால்வாய் வழியாகவும், 17 கிளைக் கால்வாய் மற்றும், 98 பகிர்மான கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது.
பிரதான கால்வாய் முழுமையாக பராமரிக்கப்படாததால், பல இடங்களில் சிதிலமடைந்து வருகிறது.
அவ்வப்போது அவை பராமரிக்கப்பட்டு வந்தாலும் முழுமையான பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது, விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழக பட்ஜெட்டில் நீர் நிலை பாதுகாப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் வேலுசாமி கூறுகையில், ''பி.ஏ.பி., பாசன கால்வாய் சுத்தம் செய்யும் பணிக்கு, நுாறு நாள் பணியாளர்களை ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட்டது; வயதான பெண்களால், புதர் சூழ்ந்த கால்வாய்க்கும் இறங்கி பணி செய்ய இயலாது. எனவே, அத்தகைய பணி செய்து பழகிய ஆண் தொழிலாளர் வாயிலாக இப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும். கால்வாயின் பல இடங்கள், கட்டுமானங்கள் சிதிலமடைந்திருக்கிறது.
கால்வாய் குடிமராமத்துப் பணியை நாங்களே மேற்கொண்டோம்; ஆனால், அந்த செலவினத் தொகை வழங்கப்படவில்லை; 56 ஆண்டு களாக பராமரிக்கப்படாத 'ஷட்டர்கள்' புதுப்பிக்கப்பட வேண்டும்.
நீர் நிலை பாதுகாப்பு தொடர்பாக ஒதுக்கப்படும் நிதி, கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் கண்காணிக்க வேண்டும்.
பி.ஏ.பி., பாசன திட்டத்துக்கென, பிரத்யேகமாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்க வேண்டும்'' என்றார்.