/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பனியன் தொழிலாளர் சம்பள பேச்சு; ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் 29ல் ஆர்ப்பாட்டம் பனியன் தொழிலாளர் சம்பள பேச்சு; ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் 29ல் ஆர்ப்பாட்டம்
பனியன் தொழிலாளர் சம்பள பேச்சு; ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் 29ல் ஆர்ப்பாட்டம்
பனியன் தொழிலாளர் சம்பள பேச்சு; ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் 29ல் ஆர்ப்பாட்டம்
பனியன் தொழிலாளர் சம்பள பேச்சு; ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் 29ல் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 15, 2025 12:08 AM

திருப்பூர்; பனியன் பேக்டரி லேபர் யூனியன் பொதுக்குழு கூட்டம், திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் ரவி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சேகர், செயலாளர் செந்தில்குமார், ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் நடராஜன் ஆகியோர் பேசினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள் - தொழிற்சங்கங்களிடையேயான சம்பள ஒப்பந்தம், இம்மாதத்துடன் முடிவடைகிறது. பனியன் தொழிலாளருக்கு, மாத சம்பளம் 32 ஆயிரத்து 941 ரூபாய் வழங்கவேண்டும். கோரிக்கைகள் குறித்த கடிதம், கடந்த ஆக. 12ம் தேதியே உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. உற்பத்தியாளர் சங்கங்கள், மேலும் காலதாமதம் செய்யாமல், உடனடியாக சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்கவேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு கூடுதல் போனஸ் தொகையை, பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன் வழங்கவேண்டும்; பீஸ்ரேட் அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், போனஸ், விடுப்பு நாள் சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்கவேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 29ம் தேதி ஏ.ஐ.டி.யு.சி., சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழக அரசின் தொழிலாளர் சார்ந்த நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக உள்ளது. தொழிலாளர் கொள்கை அறிவிக்கப்பட வேண்டும். அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம் கூட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. வரும் அக். 8ல், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.