/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பனியன் தொழிலாளி கொலை: ஐந்து பேர் கோர்ட்டில் சரண்பனியன் தொழிலாளி கொலை: ஐந்து பேர் கோர்ட்டில் சரண்
பனியன் தொழிலாளி கொலை: ஐந்து பேர் கோர்ட்டில் சரண்
பனியன் தொழிலாளி கொலை: ஐந்து பேர் கோர்ட்டில் சரண்
பனியன் தொழிலாளி கொலை: ஐந்து பேர் கோர்ட்டில் சரண்
ADDED : ஜன 06, 2024 11:55 PM
திருப்பூர்:திருப்பூரில் முன்விரோதம் காரணமாக பனியன் தொழிலாளியை வெட்டி கொன்ற, ஐந்து பேர் செங்கல்பட்டில் சரணடைந்தனர்.
திருப்பூர் திரு.வி.க., நகரை சேர்ந்தவர் பாலமுருகன், 40; பனியன் தொழிலாளி. கடந்த, 3ம் தேதி நாவிதன் தோட்டம் முதல் வீதியில் நடந்து சென்றார். இரண்டு டூவீலரில் வந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சராமரியாக வெட்டி கொன்றனர். கொலை தொடர்பாக, திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்தனர்.
கடந்த, 2022 ஜூலை 12ம் தேதி, பாலமுருகனும், அவரது தம்பி முத்துவேலும் சேர்ந்து, பெரியப்பா மகன் ஆறுமுகத்தை வெட்டி கொன்றனர். இதுதொடர்பாக, பழி வாங்க காத்திருந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் தற்போது பாலமுருகனை வெட்டி கொன்றது தெரிந்தது. ஐந்து பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இச்சூழலில், சென்னையை சேர்ந்த முருகன், 56, அவரது மகன் மணிகண்டன், 23, திருப்பூரை சேர்ந்த சரவணன், 26, கதிர்வேல், 21 மற்றும் ஹரிஹரன், 25 ஆகியோர் செங்கல்பட்டு ஜே.எம்., கோர்ட்டில் நேற்று முன்தினம் சரணடைந்தனர். போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். ஐந்து பேரையும் கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர்.