/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அயோத்தி சிறப்பு ரயில்; 2700 பேர் செல்ல தயார் பா.ஜ., ஏற்பாடுஅயோத்தி சிறப்பு ரயில்; 2700 பேர் செல்ல தயார் பா.ஜ., ஏற்பாடு
அயோத்தி சிறப்பு ரயில்; 2700 பேர் செல்ல தயார் பா.ஜ., ஏற்பாடு
அயோத்தி சிறப்பு ரயில்; 2700 பேர் செல்ல தயார் பா.ஜ., ஏற்பாடு
அயோத்தி சிறப்பு ரயில்; 2700 பேர் செல்ல தயார் பா.ஜ., ஏற்பாடு
ADDED : பிப் 12, 2024 12:51 AM
திருப்பூர்;ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதும் சிரமம் இல்லாமல் அயோத்தி செல்ல தமிழகத்தில் பல மாவட்டங்களில் பா.ஜ.,வினர் மாநில தலைமைக்கு வலியுறுத்தினர். மாநில தலைவர் அண்ணாமலை இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அயோத்தி செல்பவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
பல இடங்களில் இருந்து ஆர்வம் காட்டியதால் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து செல்லும் வகையில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.திருப்பூரில் இருந்து, 10, 15, 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ரயில்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் புறப்பட்ட சிறப்பு ரயிலில், 885 பேர் இடம்பெற்றனர். அடுத்து சிறப்பு ரயிலில் செல்ல பொதுமக்கள், கட்சியினர் உள்ளிட்டோர் தயாராக இருந்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட பா.ஜ.,வினர் கூறியதாவது:
இனி அடுத்து இயக்கக்கூடிய ரயில்களுக்கான முன்பதிவுகள் முடிந்து தயார் நிலையில் உள்ளனர்.
அடுத்து, மூன்று ரயில்களில், 2,700 பேர் செல்ல உள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் தொகுதியில் இருந்து வரும், 15ம் தேதி, 400 பேர், 20ம் தேதி, 300 பேர் மற்றும் 25ம் தேதி, 420 பேர் செல்ல உள்ளனர்.
மேலும் ஈரோடு, சேலம் உள்ளிட்ட இடங்களிலிருந்தும் பக்தர் கள் அயோத்தி செல்ல உள்ளனர்.