/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அயோத்தி ராமர் கோவில் அட்சதை விநியோகம்: பக்திக்கு அச்சாரம்அயோத்தி ராமர் கோவில் அட்சதை விநியோகம்: பக்திக்கு அச்சாரம்
அயோத்தி ராமர் கோவில் அட்சதை விநியோகம்: பக்திக்கு அச்சாரம்
அயோத்தி ராமர் கோவில் அட்சதை விநியோகம்: பக்திக்கு அச்சாரம்
அயோத்தி ராமர் கோவில் அட்சதை விநியோகம்: பக்திக்கு அச்சாரம்
ADDED : ஜன 03, 2024 12:02 AM

பல்லடம்;அயோத்தி ராமர் கோவில் அட்சதை, வீடு தோறும் விநியோகிக்கும் பணி பல்லடத்தில் நடந்து வருகிறது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில், 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அயோத்தி ராமர் கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட அட்சதை மற்றும் அழைப்பிதழ்கள் நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்பட்ட அட்சதை, பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் விநியோகிக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
பல்லடம் நகராட்சி பகுதியில், பா.ஜ., சார்பில், வார்டுகள் தோறும் வீடு வீடாகச் சென்று அட்சதை வழங்கப்பட்டு, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு அழைப்பிதழும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இவற்றை, பொதுமக்களும் பக்தியுடன் பெற்றுக் கொண்டு, நன்றி தெரிவித்து வருகின்றனர்.
----------
பல்லடத்தில், அயோத்தி ராமர் கோவில் அட்சதை மற்றும் அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது.