/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விலங்கு வழி பரவல் நோய் தடுப்பு; பள்ளியில் விழிப்புணர்வு முகாம் விலங்கு வழி பரவல் நோய் தடுப்பு; பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
விலங்கு வழி பரவல் நோய் தடுப்பு; பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
விலங்கு வழி பரவல் நோய் தடுப்பு; பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
விலங்கு வழி பரவல் நோய் தடுப்பு; பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 10, 2025 09:59 PM

உடுமலை; உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 'விலங்கு வழி பரவல் நோய் தடுப்பு' குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கால்நடை மருத்துவ கல்லுாரி முதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார்.
முகாமில், வெறிநோய் காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள், வெறிநோய் தடுப்பில், தடுப்பூசியின் முக்கியத்துவம், தவறான புரிதல் என்ற தலைப்புகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கால்நடை மருத்துவ கல்லுாரி பண்ணை வளாக உதவி பேராசிரியர் சங்கமேஸ்வரன் முகாமை ஒருங்கிணைத்தார். பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.