/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சென்னை கொங்குநாடு அறக்கட்டளை சார்பில் விருதுகள்!சென்னை கொங்குநாடு அறக்கட்டளை சார்பில் விருதுகள்!
சென்னை கொங்குநாடு அறக்கட்டளை சார்பில் விருதுகள்!
சென்னை கொங்குநாடு அறக்கட்டளை சார்பில் விருதுகள்!
சென்னை கொங்குநாடு அறக்கட்டளை சார்பில் விருதுகள்!
ADDED : ஜன 29, 2024 12:52 AM

அவிநாசி:சென்னை கொங்கு நாடு அறக்கட்டளை சார்பில், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
திருப்பூர், திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா ஹோட்டலில், சென்னை கொங்குநாடு அறக்கட்டளையின் 34ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.
இதன் தலைவர் ஒமேகா குழுமம் அப்பாவு பேசுகையில், ''35 ஆண்டுகளுக்கு முன் 'அருட்செல்வர்' பொள்ளாச்சி மகாலிங்கம் மூலம் அறக்கட்டளை துவங்கப்பட்டது. ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை, சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கு உதவி உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்கிறோம்'' என்றார்.
சக்தி குழும நிர்வாக இயக்குனர் மாணிக்கம் பேசுகையில், ''ஆண்டுதோறும் அறக்கட்டளை சார்பில் சமுதாயத்திற்கு சேவை செய்து வரும் நோக்கில், விழாவை நடத்தி வருகிறோம். கிராம ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையிலும், கல்வி படிப்பை தொடரும் வகையிலும் இந்த விழா அமைந்துள்ளது' என்றார்.
'அருட்செல்வர்' விருது, தொழில்துறைக்கு ஆற்றிய சேவைக்காக இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு(பியோ) தலைவர் சக்திவேலுக்கும், சமூக சேவைக்காக 'சென்னை சில்க்ஸ்' சந்திரனுக்கும், மருத்துவ சேவைக்காக டாக்டர் முருகநாதனுக்கும் வழங்கப்பட்டது. காலிங்கராயன் விருது பெஸ்ட் கார்ப்பரேஷன் குழும தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் சந்திரனுக்கும், கொங்குவேள் விருது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியனுக்கும், சுந்தராம்பாள் விருது சிறுதுளி அமைப்பு தலைவர் வனிதா மோகனுக்கும் வழங்கப்பட்டது.
டாக்டர் சுப்பராயன் விருதை சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவ சேனாபதி, இளம் ஊக்குவிப்பாளர் விருதை இன்ஸ்பயர் இளங்கோ ஆகியோர் பெற்றனர். 'பாரத ரத்னா' சுப்ரமணியம் விருது 'வனத்துக்குள் திருப்பூர்', 'வனம் இந்தியா' இயக்கங்களுக்கு வழங்கப்பட்டது. விருதுகளை சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குனர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் வழங்கினர்.
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், அறக்கட்டளை துணைத்தலைவர்கள் சுப்ரமணியன், அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக செயலாளர் அறிக்கையை அறக்கட்டளை செயலாளர் அரவிந்தன் வாசித்தார்.பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.