/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எண்ணெய் வித்து பயிர் சாகுபடி தவிர்ப்பு எண்ணெய் வித்து பயிர் சாகுபடி தவிர்ப்பு
எண்ணெய் வித்து பயிர் சாகுபடி தவிர்ப்பு
எண்ணெய் வித்து பயிர் சாகுபடி தவிர்ப்பு
எண்ணெய் வித்து பயிர் சாகுபடி தவிர்ப்பு
ADDED : ஜூன் 12, 2025 12:33 AM
பொங்கலுார், : திருப்பூர் மாவட்டத்தில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
திருப்பூரில் தொழில் வளர்ச்சி ஏற்பட்ட பின் சம்பளம் உயர்ந்தது. அதற்கேற்ப விளை பொருட்களின் விலை உயரவில்லை. தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகள் பெருகியதால் விவசாய பரப்பு சுருங்கியது.
விவசாயிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் எண்ணெய் வித்து பயிர் சாகுபடியை விவசாயிகள் தவிர்க்கத் துவங்கினர்.
மானாவாரி நிலங்கள் உள்ள அவிநாசி ஒன்றியத்தின் சில பகுதிகளில் மட்டும் நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது. அங்கும் அத்திக்கடவு திட்டம் வந்தபின் நெல், தென்னை, வாழை போன்ற மாற்றுப் பயிர்களுக்கு விவசாயிகள் மாறத் துவங்கி உள்ளனர்.
இப்பகுதியில் எண்ணெய் வித்துப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டதாலேயே காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் எண்ணெய் ஆலைகள் அதிகம் உள்ளது. தற்போது இவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆயில் மில்கள் வெளியூர் மற்றும் வெளி மாநில வரத்தையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.