/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உடுமலை திருப்பதி கோவிலில் 27ல் அவதார உற்சவம் துவக்கம் உடுமலை திருப்பதி கோவிலில் 27ல் அவதார உற்சவம் துவக்கம்
உடுமலை திருப்பதி கோவிலில் 27ல் அவதார உற்சவம் துவக்கம்
உடுமலை திருப்பதி கோவிலில் 27ல் அவதார உற்சவம் துவக்கம்
உடுமலை திருப்பதி கோவிலில் 27ல் அவதார உற்சவம் துவக்கம்
ADDED : ஜூன் 24, 2025 10:26 PM
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஏழாம் வருடாரம்ப அவதார உற்சவம், வரும், 27ல் துவங்குகிறது.
இந்த உற்சவம், வரும் 27ம் தேதி காலை, 7:00 மணிக்கு மேல், விஷ்வக்ேஷனர், லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி பெருமாள், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் திருமஞ்சனத்துடன் துவங்குகிறது.
காலை, 8:30 மணிக்கு மேல், புற்றுக்கோவிலில் இருந்து பால் குடம் புறப்படுதல், ரேணுகாதேவி திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை, 4:30 மணி முதல், 6:30 மணி வரை, ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் திருமஞ்சனம் நடக்கிறது. வரும், 28ம் தேதி, 7ம் ஆண்டு அவதார உற்சவம் நடக்கிறது. அன்று காலை, 7:00 மணி முதல் ேஹாமம், நவகலச ஸ்தாபிதம், வேங்கடேச பெருமாள் மூலவர் உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது.