ADDED : ஜூன் 25, 2025 09:32 PM
உடுமலை; பொள்ளாச்சி-தாராபுரம், உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் சந்திப்பு பகுதி குடிமங்கலத்தில் அமைந்துள்ளது.
இரு மாநில நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து அதிகமுள்ளதால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்டர்மீடியன் மற்றும் வேகத்தடை அமைக்கப்பட்டது. இருப்பினும், நால்ரோட்டில், வேகமாக திரும்பும் வாகனங்களால், விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில், தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.