ADDED : மே 12, 2025 03:54 AM
திருப்பூர்; திருப்பூரில் தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர், கோல்டன் நகர், கருணாகரபுரி பகுதியில் ஒரு காலியிடத்தில் வாலிபர் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.
தலையில் கல்லைப் போட்ட கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.கொல்லப்பட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ், 19 எனத் தெரிந்தது. திண்டுக்கல், நத்தம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் திருப்பூரில் தங்கி ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாள் முன் கருணாகரபுரியை சேர்ந்த சில வாலிபர்களுடன் இவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


