Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செயற்கை கால் அளவீட்டு முகாம்

செயற்கை கால் அளவீட்டு முகாம்

செயற்கை கால் அளவீட்டு முகாம்

செயற்கை கால் அளவீட்டு முகாம்

ADDED : ஜூன் 04, 2025 01:43 AM


Google News
திருப்பூர்,; மாற்றுத்திறனாளிகள் இலவச செயற்கை கால் பெறுவதற்கான அளவீட்டு முகாம், 8ம் தேதி நடக்க உள்ளது.

தேசிய மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் அமைப்பாகிய சக் ஷம் சார்பில், தன்னார்வ பொதுநல அமைப்புகளுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கை கால் வழங்கி வருகிறது.

அதற்கான அளவீட்டு முகாம், மாதமாதம் நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர், மங்கலம் ரோடு, பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில், வரும், 8ம் தேதி செயற்கை கால் அளவீட்டு முகாம் நடக்க உள்ளது.

செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், போட்டோ, ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றுடன், காலை, 9:00 மணிக்கு முகாமிற்கு வரலாம். முகாம், 9:30 முதல், மதியம், 1:30 மணி வரை நடக்கும். மேலும் விவரங்களுக்கு, 93630 32998 என்ற எண்களில் அணுகலாம் என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us