Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கடைமடையில் செயற்கை வறட்சி பி.ஏ.பி., விவசாயிகள் ஆதங்கம்!

கடைமடையில் செயற்கை வறட்சி பி.ஏ.பி., விவசாயிகள் ஆதங்கம்!

கடைமடையில் செயற்கை வறட்சி பி.ஏ.பி., விவசாயிகள் ஆதங்கம்!

கடைமடையில் செயற்கை வறட்சி பி.ஏ.பி., விவசாயிகள் ஆதங்கம்!

ADDED : மே 24, 2025 12:07 AM


Google News
திருப்பூர், : 'பி.ஏ.பி., கடைமடை விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு நீர் வினியோகம் செய்ய வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பி.ஏ.பி., கால்வாயில் வரும், 24ம் தேதி மூன்றாவது மண்டலம், நான்காவது சுற்றுக்கு நீர் திறந்துவிடுவது என, முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில், ஐந்தாவது சுற்றுக்கு இரண்டரை நாட்கள் நீர் வினியோகிப்பது என, திட்டக்குழு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, பி.ஏ.பி., நீரை பயன்படுத்தும் கடைமடை விவசாயிகள், வெள்ளகோவில் முத்துக்குமார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

திருமூர்த்தி அணை அதிகளவு நாட்கள் திறக்கப்பட்டிருப்பினும், அளவுக்கு அதிகமாகவே நீர் பெற்ற போதிலும், வெள்ளகோவில் கிளை கால்வாய்க்கு உட்பட்ட பகுதிகளில், ஐந்து நாட்கள் கூட நீர் வினியோகம் செய்யப்படவில்லை.

தொடரும் இத்தகைய மோசமான நீர் மேலாண்மையால், கடைமடை நீராதார பகுதிகளில் செயற்கை வறட்சி தென்படுகிறது. சில பகுதிகளில், இரு நாட்கள் கூட நீர் வினியோகம் செய்யப்படவில்லை; வறட்சியால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பகிர்மான குழு தலைவர் செயல்படாத நிலையில், காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோரை, 1,000க்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக சந்தித்து, கோரிக்கையை முன்வைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. வர வேண்டி பங்கில் மிகக்குறைந்த அளவு நீர்தான் வினியோகிக்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு சுற்றுகள் மட்டுமே நீர் திறந்து விடப்படுகிறது. சில நேரங்களில், அது இரண்டு சுற்றுகளாகிவிடுகிறது.

ஒவ்வொரு சுற்றுக்கும் வெறும், 5 நாட்கள் மட்டுமே தண்ணீர் பெற முடிகிறது. இந்த, 5 நாட்களில் கடைமடையில் இரு நாட்கள், ஒரு நாள் என்ற அளவில் மட்டுமே நீர் வந்தடைகிறது.

இந்த சொற்ப அளவு நீரை வைத்து, கால்நடைகளை பராமரிப்பது, குடிநீர் தேவையை பூர்த்தி செய்வ தென்பது பெரும் சவாலான காரியம்.

எனவே, குறைந்தபட்ச நீரை பெறும் முயற்சியில் எவ்வித சமரசத்துக்கும் இடம் கிடையாது; நிர்ணயிக்கப்பட்ட அளவு நீர் கிடைக்காத பட்சத்தில் போராட்டத்தின் வாயிலாக அரசின் கவனம் ஈர்க்கப்படும்.

தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us