/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பத்தாம் வகுப்பு தேர்வு ஏற்பாடு நிறைவு பத்தாம் வகுப்பு தேர்வு ஏற்பாடு நிறைவு
பத்தாம் வகுப்பு தேர்வு ஏற்பாடு நிறைவு
பத்தாம் வகுப்பு தேர்வு ஏற்பாடு நிறைவு
பத்தாம் வகுப்பு தேர்வு ஏற்பாடு நிறைவு
ADDED : மார் 26, 2025 12:23 AM
திருப்பூர்; வரும், 28ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, தமிழ் பாடத்துடன் துவங்கி நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், 30 ஆயிரத்து, 235 மாணவ, மாணவியர் பொது தேர்வை எழுத உள்ளனர். 104 தேர்வு மையங்களில் தேர்வு நடக்க உள்ளது. தேர்வு நடக்கும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணி, முன்னேற்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் என அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தலைமையில், கல்விதுறையினர் தற்போது செய்துள்ளனர்.