Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொழில்முனைவோராக விரும்பும் இளைஞரா...!

தொழில்முனைவோராக விரும்பும் இளைஞரா...!

தொழில்முனைவோராக விரும்பும் இளைஞரா...!

தொழில்முனைவோராக விரும்பும் இளைஞரா...!

ADDED : ஜூன் 20, 2025 02:43 AM


Google News
திருப்பூர் : தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்தில் சான்றிதழ் படிப்புக்கான அட்மிஷன் நடைபெற்றுவருகிறது; தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்கள் சேரலாம்.

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,) மற்றும் ஆமதாபாத் இ.டி.ஐ.ஐ., இணைந்து, தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்துக்கான சான்றிதழ் படிப்பை கடந்த ஆண்டு முதல் நடத்திவருகின்றன. நடப்பு ஆண்டுக்கான படிப்பு, இம்மாத இறுதியில் துவங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டுவருகிறது. தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்கள், இந்த படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

இப்படிப்புக்கு தமிழக அரசு, ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள், ஐ.டி.ஐ., ல் தொழிற் கல்வி பயிற்சி முடித்தோர் இணையலாம்.

சென்னையில், புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம், நவீன வசதிகளுடன் கூடிய நுாலகம், திறன் மிக்க பயிற்சியாளர்களை கொண்டு, ஸ்மார்ட் வகுப்பறையில் பாடங்கள் நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, www.editn.in என்கிற இணையதளத்தை பார்வையிடலாம். 86681 01638, 86681 07552 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us